சூரிச் நகரில் மாவட்டம் 6 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் சனிக்கிழமை மாலை கண்டுபிடித்தனர்.
38 வயதுடைய டொமினிக்கன் பெண்ணே உயிரிழந்திருப்பதாகவும் அவர் மீது வன்முறை இடம்பெற்றிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
- Advertisement -

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சூரிச் கன்டோனல் பொலிசார், குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
மாவட்டம் 4இல் கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபர் 23 வயதுடையவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- Zueritoday


