-0.5 C
New York
Tuesday, December 30, 2025

சுவிஸ் வானில் தென்பட்ட அதிசயம்.

சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் நேற்றிரவு பிரகாசமான பொருள் ஒன்று வானில் இருந்து விழும் காட்சி தென்பட்டுள்ளது.

நேற்றிரவு 9.27 மணி தொடக்கம் 9.30 மணி வரை மெதுவாகப் பயணம் செய்த அந்தப் பொருள் நீண்ட வாலுடன் கூடியதாக காணப்பட்டது.

அது ஒரு விண்கல்லாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை இன்னும் சிலர் அது விண்கலம் ஒன்றின் சிதைவாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

எனினும், அந்த விண்பொருள் இன்னமும் அதிகாரபூர்வமாக இனங்காணப்படவில்லை.

Basel, Bern, Zurich, Aargau, Glarus, Lucerne  மற்றும்  St. Gallen கன்டோன்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த விண்பொருளை அவதானிக்க முடிந்துள்ளது.

மூலம் -20min

Related Articles

Latest Articles