7.1 C
New York
Monday, December 29, 2025

ஆடுகளை வேட்டையாடிய காட்டுப் பூனை சுட்டுக்கொல்லப்பட்டது

Schwyz’s Muotatal  கன்டோனில்  ஆடுகளை அச்சுறுத்தி வந்த lynx எனப்படும் காட்டுப் பூனை வகை விலங்கு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

இந்த மாத நடுப்பகுதியில் மூன்று இரவுகளில் ஒன்பது ஆடுகளை இந்த விலங்கு அடித்துக் கொன்றது.

இதையடுத்து  இந்த விலங்கை சுட்டுக் கொல்வதற்கு ஓகஸ்ட் 16 ஆம் திகதி பெடரல் அதிகாரிகளிடமிருந்து கன்டோன் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இரவு பார்வை சாதனங்கள் பொருத்தப்பட்ட துப்பாக்கிகளுடன், காத்திருந்த அதிகாரிகள், திங்கள்கிழமை இரவு Chupferberg மலைக்கு அருகில் இந்த விலங்கைச் சுட்டுக் கொன்றனர் என்று சுற்றுச்சூழல் சுவிஸ் தெரிவித்துள்ளது.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles