6.8 C
New York
Monday, December 29, 2025

சூரிச்சில் நட்புறவு ஆசனங்கள் – சட்டம் நிறைவேறியது.

சூரிச் நகரில் நட்புறவு ஆசனத்தை அமைப்பதற்கான சட்டம், நகர சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

எதிர்காலத்தில், பிரச்சினைகளைப் பற்றி பேச விரும்பும் எவரும் சூரிச் நகரத்தில்  இந்த நட்புறவு ஆசனத்தில் அமர முடியும்.

பயிற்சி பெற்ற உதவியாளர் ஒருவர் அருகில் அமர்ந்து அந்தப் பிரச்சினைகளைப் பற்றி கேட்பார்.

நகர சபையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 69 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நட்புறவு ஆசனம் ஆபிரிக்காவில், குறிப்பாக சிம்பாப்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வசிப்பவர்கள் பேச வேண்டியிருக்கும் போது அத்தகைய ஆசனத்தில் அமரலாம். ஒரு சாதாரண உதவியாளர், பொதுவாக ஒரு பாட்டி, அமர்ந்து  அனுதாபத்துடன் காது கொடுத்துக் கேட்பார்.

அமெரிக்காவிலும் நட்புறவு ஆசனங்கள் உள்ளன. அங்கு, இளைஞர்களை பேச ஊக்குவிக்கும் நோக்கத்தில் பாடசாலை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மூலம் – Bluewin

Related Articles

Latest Articles