26.7 C
New York
Thursday, September 11, 2025

பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரமாண்ட பொதுக்கூட்டங்கள்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பொதுக் கூட்டங்கள் மாவட்ட ரீதியாக இடம்பெற்று வருகின்றன.

பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், நேற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் மாபெரும் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.

கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் நேற்றுமைாலை தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ககலந்து கொண்டனர்.

நாளை 18ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் இன்று மட்டக்களப்பில் பொது வேட்பாளருக்கு ஆதரவான பாரிய கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆரவான பிரமாண்ட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles