30.3 C
New York
Monday, June 23, 2025

கொலையில் முடிந்த வாக்குவாதம்.

Bernese Jura இல் உள்ள Tavannes இல், வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.

பேர்ன் கன்டோனல் பொலிசாரின் கூற்றுப்படி, 37 வயதுடைய நபர் ஒரு கத்திக்குத்து காயத்தின் விளைவாக உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை இரவு 10:10 மணிக்குப் பின்னர்,  Tavannes இல் உள்ள கிராண்ட்-ரூவில் இரண்டு நபர்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்ததாக பேர்ன் கன்டோனல் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு சென்ற போது, ​​இருவர்  காயமடைந்த நிலையில் இருப்பதை கண்டனர். அவர்களில் ஒருவர் மோசமாக காயமடைந்திருந்தார்.

உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

37 வயதுடைய அந்த நபர் கத்திக்குத்து காயத்தினால் உயிரிழந்துள்ளதாக தடயவியல் வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இரண்டாவது நபர் சிறிய காயங்களுடன்அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் தற்காலிகமாக கைது செய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் அலுவலகம் விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலுக்கு விண்ணப்பித்துள்ளது.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles