14 C
New York
Friday, May 15, 2026

ஓட்டுநர்களைக் குழப்பிய கூகுள் வரைபடம்.

சூரிச் நகரில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக வாகன ஓட்டுநர்கள் பெரிதும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

சூரிச் நகரத்தின் போக்குவரத்துத் துறை போக்குவரத்து சமிக்ஞைகளில் தினசரி மாற்றங்களைச் செய்கிறது.

சூரிச்சில், தற்போது ஒன்றன் பின் ஒன்றாக வீதி போக்குவரத்து தடைச் சின்னங்கள் காணப்படுகின்றன.

சைக்கிள் ஓட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் காரணமாக, வீதிகளில் அதிக தடைகள் காணப்படுகின்றன.

இதனால், போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள்,  ஓட்டுநர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

கூகுள் வரைபடமும் ஓட்டுநர்களை குழப்பமடையச் செய்துள்ளது.

அது தவறாக வழிகாட்டிய பல சம்பவங்களால் ஓட்டுநர்கள  பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles