19.5 C
New York
Tuesday, September 9, 2025

2038 ஒலிம்பிக்கை சுவிசில் நடத்த பெடரல் கவுன்சில் ஆதரவு.

2038 ஆம் ஆண்டில்  ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் சுவிட்சர்லாந்தில் நடத்துவதற்கு சுவிஸ் பெடரல் கவுன்சில் ஆதரவு வழங்கியுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சர் நேற்று முன்வைத்த திட்டங்களுக்கு ஆதரவு வழங்கிய  பெடரல் கவுன்சில் நிதி உதவி வழங்குவதற்கும் முன்வந்துள்ளது.

2038 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டு சங்கத்திடம் போட்டியை நடத்துவதற்கான  வேட்புமனு சமர்ப்பிப்பது மற்றும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான  குழுவை அமைக்கவும் அரசாங்கம்  முடிவு செய்துள்ளது.

 விளையாட்டுத் துறை அமைச்சர் வயோலா அம்ஹெர்ட் 2026 ஜூன் இறுதிக்குள் ஒரு திட்டமிடல் முடிவை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles