21.8 C
New York
Monday, September 8, 2025

ஹில்புல்லா தலைவர் நஸ்ரல்லா இஸ்ரேலின் தாக்குதலில் பலி.

லெபனானின் பெய்ரூட் நகரில் இஸ்ரேல் இன்று நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்  ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 20 இற்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்ரேலிய விமானப்படை அகோரமான குண்டுத் தாக்குதலை நடத்தியது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்  ஹசன் நஸ்ரல்லா தங்கியிருந்த நிலத்தடி பதுங்கு குழியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கொல்லப்பட்டார் என்றும் இஸ்ரேல் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தமது அமைப்பின் தலைவர்  ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்து விட்டதை ஹிஸ்புல்லா அமைப்பு இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.

தாங்கள் மிகப் பெரிய இலக்கை அடைந்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles