35.6 C
New York
Monday, June 23, 2025

ஈ கோலியால் பாதிப்பு – மீளப் பெறப்படும் கீரை பொதிகள்.

இரண்டு Naturaplan தயாரிப்புகள் Escherichia coli பக்டீரியாவால் மாசுபட்டிருக்கலாம் என்பதால், Coop தயாரிப்புகளை கடைகளில் இருந்து மீளப் பெறுகிறது.

வாடிக்கையாளர்கள் இவற்றை வாங்கியிருந்தால் அதனைக் கொடுத்து, பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

100-கிராம் பொதியில் உள்ள Naturaplan organic young spinach  மற்றும்,  90-கிராம்  பொதியில் உள்ள Naturaplan organic young lettuce ஆகியவையே மீளப் பெறப்படுகின்றன.

ஈ கோலி பக்டீரியாவால் உடல்நலம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

இந்த தயாரிப்புகளை உட்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

செப்டம்பர் 28, செப்டம்பர் 29, செப்டம்பர் 30, மற்றும் ஒக்டோபர் 2, ஆகிய திகதிகளுக்கு முந்தைய காலாவதி திகதிகளில் உள்ள தயாரிப்புகளே  பாதிக்கப்பட்டுள்ளன.

மூலம் – 20min

Related Articles

Latest Articles