19.8 C
New York
Thursday, September 11, 2025

நோரோவைரஸ் தொற்று – 30 சுவிஸ் இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சுவிஸ் இராணுவத்தைச் சேர்ந்த பலருக்கு நோரோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்த, பெருமளவு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Vaud கன்டோனில் Bière இல் உள்ள 1ஆவது ஆட்டிலறி குழுவைச் சேர்ந்த சுமார் 30 வீரர்களும்,  Ticino கன்டோனில் Airolo வில்  உள்ள சுகாதாரப் பாடசாலையில், 42 பேரும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது நோரோவைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாந்தி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இந்த நோய் பொதுவாக 72 மணிநேரம் நீடிக்கும்.

தடுப்பூசி இல்லாத இந்த வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவக் கூடியது.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles