17.2 C
New York
Wednesday, September 10, 2025

சுவிஸ் ஊடகவியலாளர் மீது ரஷ்ய புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை.

ரஷ்ய கூட்டமைப்பின் மாநிலமான கேர்ஸ்க் பிராந்தியத்தின் எல்லையை சட்டவிரோதமாக கடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சுவிஸ் ஊடகவியலாளர்  Kurt Peldaவுக்கு எதிராக  ரஷ்ய இரகசிய சேவை   நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

CH Mediaவுக்காக உக்ரைனில் இருந்து தொடர்ந்து செய்திகளை வழங்கும்  ஊடகவியலாளர்  Kurt Peldaவுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார் என ரஷ்ய உள்நாட்டு புலனாய்வுத்துறையான FSB தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு தொலைக்காட்சியான பிரான்ஸ் 24 இல் பணிபுரியும் பத்திரிகையாளர் கேத்தரின் நோரிஸ் ட்ரெண்டிற்கு எதிராகவும் FSB நடவடிக்கை எடுத்துள்ளது.

ஓகஸ்ட் 17 ஆம் திகதி முதல் மொத்தம் 14 வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது  இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles