18.8 C
New York
Wednesday, September 10, 2025

வௌவால்களில் ரேபிஸ் வைரஸ் – அதிகாரிகள் அதிர்ச்சி.

கிழக்கு சுவிட்சர்லாந்தின் Glarus கன்டோனில்,  Daubenton’s murineஇனத்தைச் சேர்ந்த வௌவால்களில் ரேபிஸ் வைரஸைக் கண்டறிந்துள்ளதாக சுவிஸ் ரேபிஸ் மையம் அறிவித்துள்ளது.

1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவிசில் இதுபோன்ற ஏழு ரேபிஸ் வைரஸ் தொற்றுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.

Glarus North நகராட்சியில் உள்ள Mühlehorn என்ற இடத்தில் நீர்வாழ் சூழலில் வாழும் வௌவாலில் இந்த ரேபிஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20 ஆம் திகதி இது கண்டுபிடிக்கப்பட்டதாக Glarus மாகாணத்திற்கு பொறுப்பான உணவு பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட அல்லது அசாதாரணமான நடத்தையை வெளிப்படுத்தும் காட்டு விலங்குகளைத் தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் வௌவால் கடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles