18.3 C
New York
Wednesday, October 7, 2026

பெட்ரோல் நிலையத்தில் கத்தியைக் காட்டி பணம் கொள்ளை.

Schwamendingen இல் உள்ள Migrol பெட்ரோல்  நிலையத்தில் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி ஊழியரிடம் இருந்து ஒருவர் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.

திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

அவர் கொள்ளையடித்த பல நூறு பிராங்குகளுடன் கால்நடையாகத் தப்பி ஓடியுள்ளார்.

அவர் அரைகுறையாக ஜெர்மன் மொழியில் பேசினார் என்றும், 165 தொடக்கம் 175 சென்டி மீற்றர் வரை உயரமும், மெல்லிய உடலமைப்பையும் கொண்டவர் என்றும் சூரிச் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles