Bellevue க்கு அருகே ட்ராம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை 7 மணியளவில் லைன் 9 இல் கோப்ரா ட்ராம் Quaibrücke அருகே பாதசாரி மீது மோதியது.
Utoquai/Quaibrücke பிரிட்ஜ்ஹெட்டில் பாதசாரி கடவையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பாதசாரி அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் இதனால் 3 மணிநேரம் Bellevue இல்இருந்து Bürkliplatz க்கு செல்லும் Quai பாலம் மூடப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் -Zueritoday