17.1 C
New York
Wednesday, September 10, 2025

குறுகிய நேர வல்லுறவு குற்றத்துக்கு நீண்டகாலத் தண்டனையா?

வல்லுறவு நடைபெற்ற காலத்தை தண்டனை வழங்கும்போது குற்றவாளிக்கு ஆதரவாக கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சுவிஸ் பெடரல் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், குற்றத்தின் நீளம் அதிகரித்த குற்ற ஆற்றலை சுட்டிக்காட்டினால், அது நிச்சயமாக குற்றவாளியின் குற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Valais கன்டோனல் நீதிமன்றம், குறுகிய காலத்தில் நடந்த வல்லுறவுக் குற்றத்திற்கு, தண்டனை விதிக்கும் போது அதனை மென்மையாக மதிப்பீடு செய்திருக்க வேண்டும் என பெடரல் நீதிமன்றத்தில்  ஒரு போர்த்துகீசிய நபர் மேல்முறையீடு செய்திருந்தார்.

குறுகிய கால பலாத்காரம் என்ற வார்த்தை அபத்தமானது என்று சுவிஸ் உயர்நீதிமன்றம் கூறி அவரது மனுவை நிராகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு, ஒரு பெண்ணை குற்றவாளி வல்லுறவுக்குட்படுத்தியதற்காக கீழ் நீதிமன்றம் அவருக்கு 42 மாதங்கள் சிறை தண்டனை விதித்ததுடன் பத்தாண்டுகளுக்கு வெளியேற்ற உத்தரவும் பிறப்பித்திருந்தது.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles