17.2 C
New York
Wednesday, September 10, 2025

கார் விபத்தில் தாயும் குழந்தையும் படுகாயம்.

Solothurn  இல், Kestenholz இற்கும் Oensingen இற்கும் இடையே  இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

அவர்களில் ஒரு பெண் மற்றும் ஒரு சிறு குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக்காலை பெண் ஒருவர் தனது சிறு குழந்தையுடன் சென்று கொண்டிருந்த காரும், மற்றொருவர் ஓட்டி வந்த காருமே மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணும், குழந்தையும் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மற்றைய காரின் சாரதி காயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles