-0.2 C
New York
Tuesday, December 30, 2025

ஒஸ்ரிய வலதுசாரி தீவிரவாதி சுவிசில் கைது.

ஒஸ்ரியாவின் வலதுசாரி தீவிரவாதி மார்ட்டின் செல்னர் Thurgau கன்டோனல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு, சுவிட்சர்லாந்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

அந்த தடையை மீறி அவர் இன்று சுவிசுக்குள் நுழைந்த போது,  Kreuzlingen இல் தற்காலிகமாக கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை அவர் ஜெர்மனியின் Constance  அருகே, சுவிட்சர்லாந்து  எல்லையைக் கடந்த  போது, பொலிசாரால் உடனடியாக  அழைத்துச் செல்லப்பட்டார்.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles