28.8 C
New York
Tuesday, July 1, 2025

ஆட்களைக் குறைக்கிறது புலம்பெயர்ந்தோருக்கான அரச செயலகம்.

ஆதரவற்ற சிறுவயது புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான உதவிப் பணியாளர்களை புலம்பெயர்ந்தோருக்கான அரச செயலகம் குறைத்து வருகிறது.

தேசிய அளவில் 120 முழுநேர பதவிகள் இதன் மூலம் குறைக்கப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்திற்கு வரும் இளம் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதே, இந்தக் குறைப்புக்குக் காரணமாகும்.

“எதிர்பார்த்ததை விட குறைவான புகலிடக் கோரிக்கையாளர்களையே நாங்கள் கவனித்து வருவதால், வரும் மாதங்களில் எங்களுக்கு குறைவான ஆலோசனை பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.

இதனால் சில இடங்களை மூடுவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்” என்று புலம்பெயர்ந்தோருக்கான அரச செயலகத்தின் பேச்சாளர்  Magdalena Rast கூறினார்.

பல்வேறு பெடரல் புகலிட மையங்களில் ஆதரவற்ற சிறார்களின் எண்ணிக்கை செப்ரெம்பர் 2023 இல் 1,500 ஆக இருந்த நிலையில் தற்போது 600 ஆகக் குறைந்துள்ளது.

இந்த ஆட்குறைப்பு முடிவு சிறப்புப் பயிற்சி பெற்ற கல்வியாளர்கள் மற்றும் சமூகக் கல்வியாளர்களைப் பாதிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles