-0.2 C
New York
Tuesday, December 30, 2025

கத்தியை காட்டி மிரட்டி எரிபொருள் நிலையத்தில் கொள்ளை.

மாவட்டம் 11 இல் உள்ள Dörflistrasse இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த இருவர், அங்கிருந்த பணியாளரை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

நேற்று இரவு 10:30 மணிக்கும்  10:45 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் ஆயிரக்கணக்கான பிராங் பணத்துடன், கால்நடையாகத் தப்பிச் சென்றதாக சூரிச் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவத்தை அடுத்து பொலிசார் உடனடியாக எரிபொருள் நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

எனினும் அவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles