கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ, கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது-44) என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அவர் உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
முன்பகை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.