2.3 C
New York
Tuesday, April 21, 2026

டென்மார்கில் மின்தூக்கிகளுக்குள் அகப்பட்டு தமிழர் பலி.

டென்மார்க்கின் ஹோல்டட் நகரில் அமைந்துள்ள Danish Crown இறைச்சிக் கூடத்தில்  இடம்பெற்ற விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அங்கு  துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த 54 வயதான ஒருவரே செவ்வாய்க்கிழமை இரவு எட்டு மணியளவில்  நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து எப்படி நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை எனவும், அதிகாரிகளின் விசாரணைகளுக்காக காத்திருப்பதாகவும் Danish Crown பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டு மின்தூக்கிகளுக்கு இடையில் நசுக்கப்பட்டதால் அந்த நபர் இறந்தார் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போது, அவர் சிக்கியிருப்பதைக் கண்டோம் . சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த நபர் உயிரிழந்து விட்டார் என வைத்தியர் ஒருவர் உறுதி செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து எப்படி நடந்தது என்று யாரும் பார்க்கவில்லை. எனினும், ஒரு குற்றம் நடந்ததாக நம்புவதற்கு தங்களுக்கு எந்த காரணமும் இல்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Articles

Latest Articles