22.8 C
New York
Tuesday, September 9, 2025

சூரிச் விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது.

சூரிச் விமான நிலையத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில்,  போதைப்பொருள்களைக் கடத்திய  இரண்டு பேரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

40 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ஹஷிஸ் மற்றும் கஞ்சாவை  எடுத்துச் சென்றவர்களே பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

ஒருவரின் பயணப் பொதியில் இருந்து 42 கிலோ கஞ்சாவும், மற்றொருவரின் பயணப் பொதியில் இருந்து 2 கிலோ ஹஷிஸ் போதைப் பொருளும் கண்டுபிடிக்கப்பட்டன.

பாக்கொங்கில் இருந்து சூரிச் வந்த 33 வயதுடைய ஸ்பானியரும், புகெட்டில் இருந்து லண்டன் செல்வதற்காக வந்த 45 வயதான பிரித்தானியரிடம் இருந்தும் இந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles