Glarus கன்டோனில் உள்ள Weissenbergen இல், 93 சாரதி ஒருவர் ஓட்டிச் சென்ற கார், 80 மீற்றர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.
93 வயது முதியவர் ஒருவர் தனது காரை தனியாக மேல்நோக்கி ஓட்டிச் சென்ற போது, விவசாய வாகனம் ஒன்று அவரை நோக்கி வந்தது.
அவர் அதற்கு வழி விட முயன்ற போது, சாய்வான பகுதியில் கவிழ்ந்து கார் 80 மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்தது.
இதன்போது காரை ஓட்டிச் சென்ற முதியவர் வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
மூலம்- zueritoday