16.6 C
New York
Wednesday, September 10, 2025

VBS தலைமைச் செயலகம் முன் மர்ம பொதியால் பதற்றம்.

பேர்ன் கன்டோனில் உள்ள, Maulbeerstrasse இல் VBS தலைமைச் செயலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை மாலை ஒரு சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதால், அந்தப் பகுதி மூடப்பட்டது.

வெள்ளை நிற வான் ஒன்றுக்கு கீழ் அந்த மர்ம பொருள் காணப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியை பொலிசார் மூடியதுடன், அருகில் இருந்த கட்டடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

எனினும், அந்தப் பொதியில் ஆபத்தான பொருட்கள்  எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் அந்தப் பகுதியை பொலிசார் திறந்து விட்டனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles