16.9 C
New York
Thursday, September 11, 2025

செய்மதி கருவி பழுது- பொஸ்டன் சென்ற சுவிஸ் விமானம் திரும்பியது.

பொஸ்டனுக்குச் சென்று கொண்டிருந்த சுவிஸ் விமானம் செய்மதி தொடர்பாடல் குழப்பத்தினால் மீளவும் திரும்பியுள்ளது.

சூரிச் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை  5.30 மணியளவில் சுவிஸ் விமானம் பொஸ்டனுக்குப் புறப்பட்டுச் சென்றது.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பறந்து  அயர்லாந்துக்கு மேலாக சென்று கொண்டிருந்த போது,  செய்மதி தொடர்பாடல் கருவி வேலை செய்யவில்லை.

அத்திலாந்திக் கடலுக்கு மேலாக  பறப்பதற்கு இந்தக் கருவி அவசியம் என்பதால், விமானத்தை மீண்டும் சூரிச்சிற்கு திருப்ப விமான முடிவு செய்தார்.

இதையடுத்து அந்த விமானம் இரவு 11 மணியளவில் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பயணிகளுக்கு மாற்று பயண ஒழுங்குகள் மற்றும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மூலம் -20min

Related Articles

Latest Articles