16.9 C
New York
Thursday, September 11, 2025

சுவிட்சர்லாந்தில் பறவைக் காய்ச்சல் பரவுகிறது.

சுவிட்சர்லாந்தில், இந்த பருவத்தில் முதல் பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ளது.

மத்திய சுவிட்சர்லாந்தில் Altdorf அருகே உள்ள Reuss ஆற்றின் முகத்துவாரத்தில் இறந்து கிடந்த ஒரு அன்னம், H5N1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, Uri கன்டோன், ஒரு கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு வலயத்தை நிறுவியுள்ளது.

ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் Reuss deltaவை உள்ளடக்கிய கட்டுப்பாட்டு வலயம், புதன்கிழமை கன்டோனல் ஆய்வகத்தால் அறிவிக்கப்பட்டது.

கண்காணிப்பு வலயம் மூன்று கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் பாதிப்பு திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு வலயத்தில், கோழிப்பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இறந்த காட்டுப் பறவைகளைத் தொடுவதைத் தவிர்க்குமாறும், மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles