16.9 C
New York
Thursday, September 11, 2025

4.26 மில்லியன் பிராங்குகளுக்கு ஏலம்போன 18ஆம் நூற்றாண்டு வைர நெக்லஸ்.

ஜெனீவாவில், 18ஆம் நூற்றாண்டு வைர நெக்லஸ் 4.26 மில்லியன் பிராங்குகளுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 500 உயர் கரட் வைரங்களைக் கொண்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நெக்லஸ்,  நேற்று  ஜெனீவாவில் ஏலத்தில் விடப்பட்டது.

இதன்போது,  4.55 மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

நெக்லஸ் ஒரு தனியார் சேகரிப்பில் இருந்து வந்தது. இது 50 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக இப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏலத்தின் போது,  நெக்லஸ் 3.55 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. வரிகள் மற்றும் தரகுப்பணத்துக்குப் பின்னர், 4.26 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக அதன் விலையை அடைந்தது.

இந்த நெக்லஸ்  ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் மரபுரிமையாக இருந்தது.

1937 இல் கிங் ஜோர்ஜ் VI இன் முடிசூட்டு விழா மற்றும் 1953 இல் அவரது மகள் ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவில் இந்த நெக்லஸ் அணியப்பட்டிருந்தது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles