2.1 C
New York
Thursday, February 12, 2026

அதிக வசதிகளுடன் புதிய ரயில்களை அறிமுகப்படுத்துகிறது SBB

2033  ஆம் ஆண்டு முதல் அதிக இடவசதி, தனியுரிமை போன்றவற்றுடன் கூடிய புதிய ரயில்களை அறிமுகப்படுத்த SBB திட்டமிட்டுள்ளது.

அதிக வசதி கொண்ட சொகுசு இருக்கைளுடன் கூடிய  புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கு SBB திட்டமிடுகிறது.

அனைத்து பயணிகளின் தேவைகளையும் நிவர்த்தி செய்வதே இதன் நோக்கம்.

இதற்கமைய முதல் வகுப்பில் அதிக இடவசதி மற்றும் தனியுரிமையும், இரண்டாம் வகுப்பில் பொதிகளுக்கு அதிக இடமும் இருக்கும்.

ஒற்றைத் தட்டு ரயில் பெட்டிகளுக்குப் பதிலாக புதிய ஆசன அமைப்புகளைக் கொண்ட ரயில் பெட்டிகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

இவை பணிகளை மேற்கொள்வதற்கும்,  மின்சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும் தேவையான வசதிகளையும் கொண்டிருக்கும்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles