11.6 C
New York
Thursday, April 23, 2026

Basel கன்டோன்கள் முழுவதும் பரவியது டைகர் நுளம்பு.

2024 கோடையில் வெப்பமான, ஈரப்பதமான வானிலை, Basel-Stadt மற்றும் Basel-Landschaft கன்டோன்களில் டைகர்  நுளம்புகள் பரவுவதற்கு ஊக்கமளித்துள்ளது.

இந்த நுளம்புகள் இப்போது Basel-Stadt கன்டோன் முழுவதும் பரவி விட்டது.

ஆசிய டைகர் நுளம்பு டெங்கு காய்ச்சல் போன்ற வெப்பமண்டல தொற்று நோய்களை பரப்பும். இதனால் இந்த நோய்கள் சுவிட்சர்லாந்திலும் பரவக்கூடும், ஆனால் அத்தகைய தொற்று  எதுவும் இதுவரை அறியப்படவில்லை.

குளிர்காலத்தில் டைகர் நுளம்பு முட்டைகளை அகற்றுவதன் மூலம் இவை பரவுவதை தடுக்கலாம்.

நுளம்பு முட்டைகள் கண்ணுக்குத் தெரியாது, எனவே தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து கொள்கலன்களில் இருந்தும் நீரை அகற்றி தூரிகை மூலம் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

பானைகள், தட்டுகள், மழை பீப்பாய்கள் அல்லது கல்லறையில் உள்ள மலர் குவளைகளுக்கும் இது பொருந்தும்.

தோட்டங்கள் மற்றும் பல்கனிகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்,

மேலும் தேவையில்லாத பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles