20.3 C
New York
Thursday, June 18, 2026

உச்சத்தை தொட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்.

கடந்த ஆண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை புதிய  உச்சத்தைத் தொட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டில் 661 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது கடந்த மூன்று வருடங்களின் சராசரியை விட ஐந்து மடங்கு அதிகம்.

இவற்றில், 372 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) அறிவித்தது.

அது தவிர,, 138 கல்லீரல், 69 நுரையீரல் மற்றும் 63 இதய மாற்று அறுவை சிகிச்சைகளும் இடம்பெற்றுள்ளன.

உறுப்புகளைப் பெற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆண்களாவர்.

உறுப்புகளைப் பெற்றவர்களில், 15 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகளும் இருந்தனர்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆண்டு செலவு 76 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மூலம் – watson.ch

Related Articles

Latest Articles