15.8 C
New York
Thursday, September 11, 2025

சுவிசில் 16 வயது வரை சமூக ஊடகங்களுக்குத் தடை?

சுவிட்சர்லாந்தில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சுமார் 78 வீதமானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலேயே இந்தக் கருத்து வெளிப்பட்டுள்ளது.

Leewas அமைப்பினால், சுமார் 13,215  பேரிடம், நொவம்பர் 21 தொடக்கம் 24ஆம் திகதி வரை இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

இதில் பங்கேற்ற 18 வயது தொடக்கம் 65 வயது வரையானவர்களில் 78 வீதமானோர், பேஸ்புக், இன்டாகிராம், டிக் டொக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக உயர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles