18.2 C
New York
Thursday, September 11, 2025

Biel நகரில் மீண்டும் சுத்தமான குடிநீர்.

Biel  நகரின் வடக்கில் குடிநீர் மீண்டும் சரியான தரத்தில் வழங்கப்படுவதாக, ESB நேற்று அறிவித்துள்ளது.

அண்மைய சோதனைகளில் எந்த பக்டீரியாவும் கண்டறியப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹ்லன்வால்ட் நீர்த்தேக்கம் கோலி மற்றும் என்டோரோகோகி பக்டீரியாவால்  மாசுபட்டது செவ்வாயன்று கண்டறியப்பட்டது.

பின்னர் குடிநீரில் குளோரின் கலந்து சுத்திகரிக்கப்பட்டது. குடிப்பதற்கு முன் தண்ணீரை கொதிக்க வைக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனால், வடக்கில் உள்ள மாவட்டங்கள் மற்றும் லியூப்ரிங்கன்/மேக்லிங்கன் நகராட்சி ஆகியவை பாதிக்கப்பட்டன.

நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட  பகுதினகளில் உள்ளவர்கள்  குழாய் நீரை வழக்கமாகப் பயன்படுத்துவதற்கு முன் ஐந்து நிமிடங்களுக்கு அனைத்து வீட்டுக் குழாய்களையும்  திறந்து விட்டு சுத்தப்படுத்த ESB பரிந்துரைத்தது.

தண்ணீரில் இன்னும் சிறிது குளோரின் சுவை இருக்கலாம் என்றும் இது ஆரோக்கியத்திற்கு பாதிப்பில்லாதது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – watson.ch

Related Articles

Latest Articles