19.8 C
New York
Thursday, September 11, 2025

டிக் டொக்கில் பரவும் ‘சூப்பர்மான் சலஞ்ச்’சினால் ஆபத்து.

டிக் டொக்கில் “சூப்பர்மான் சலஞ்ச்” பரவி வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் இளையோர் மத்தியில் இது தீவிரமாக பரவியுள்ளது.

ஐரோப்பாவில் இதன் தாக்கத்தினால் அதிகளவில் காயங்கள், எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதில் பங்கேற்ற, பல நாடுகளைச் சேர்ந்த பெருமளவு  குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு எலும்பு முறிவுகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ருமேனியாவில் புக்காரெஸ்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த விளையாட்டினால், 20 மாணவர்கள் காயமடைந்த நிலையில் செவ்வாயன்று ஒரே நாளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிலும் ஒரே நாளில் 189 மாணவர்கள் காயம் அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாடசாலைகளிலும் பெற்றோர் மூலமும் பிள்ளைகளுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles