19.4 C
New York
Sunday, May 17, 2026

விபத்தை தவிர்க்க முயன்று விபத்தில் சிக்கிய கார் சாரதி.

Weinfelden  இல் உள்ள Freiestrasse இல் நேற்று வீதியில் கவிழ்ந்த அஞ்சல் வாகனத்தின்  இழுவைப் பெட்டி மீது மோதுவதை தவிர்க்க முயன்ற கார் சாரதி ஒருவர், இன்னொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானார்.

நேற்றுக்காலை 10.35 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

ரயில்வே கடவைப் பகுதியில் திருப்ப முயன்ற போது, தபால் காரரின் மோட்டார் சைக்கிள் இழுவைப் பெட்டி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

நடுவீதியில் கவிழ்ந்த அந்த வாகனத்தின் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக தனது காரை திருப்பிய சாரதி ஒருவர் எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த கார் மீது மோதினார்.

இதனால் இரண்டு கார் சாரதிகளும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles