16.6 C
New York
Thursday, September 11, 2025

ஒரே மாதிரி இரு விபத்துகள் – 2 சிறுவர்கள் படுகாயம்.

Pfäffikon இல் உள்ள Kempttalstrasse இல் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுவன்படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வீதியைக் கடந்த சிறுவனை கார் ஒன்று மோதியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் ஹெலிகொப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த வீதி இரவு 9 மணி வரை மூடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக சூரிச் கண்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

அதேவேளை, Wädenswil இல் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இதேபோன்றதொரு விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வீதியைக் கடக்க முயன்ற 13 வயதுச் சிறுமி கார் மோதி படுகாயம் அடைந்த நிலையில் ஹெலிகொப்டர் மூலம் மருருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles