சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் ஸ்டன் துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளனர்.
வியாழக்கிழமை செனட் சபையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர் Michaël Buffat முன்வைத்த இதுதொடர்பான பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தப் பிரேரணை ஏற்கனவே பெப்ரவரியில் பிரதிநிதிகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இதனை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.
மூலம்- swissinfo


