4.8 C
New York
Monday, December 29, 2025

ஏழரை மில்லியன் பொதிகளை விநியோகித்த சுவிஸ் போஸ்ட்.

நவம்பர் 25 ஆம் திகதிக்கும் டிசம்பர் 3 ஆம் திகதிக்கும் இடையில், சுவிஸ் போஸ்ட், 7.5 மில்லியன் பொதிகளை விநியோகித்துள்ளது.

கறுப்பு வெள்ளி மற்றும் சைபர் திங்கட்கிழமை  போன்ற சலுகை நாட்களை முன்னிட்டு,  சுவிஸ் போஸ்ட் அதிகளவில் பொதிகளை கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒரு புதிய சாதனை என்று சுவிஸ் போஸ்ட் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில், 5 இலட்சத்துக்கும் குறைவான பொதிகளையே விநியோகிக்கப்பட்டது.

இந்த பொதிகள் உச்ச விநியோக காலம், கிறிஸ்மஸ் வரை தொடரும், என்று, சுவிஸ் போஸ்ட் மேலும் கூறியுள்ளது.

இதனால், 19,000 சுவிஸ் போஸ்ட் ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றுகின்றனர்.

மொத்தம் 14,500 விநியோக ஊழியர்கள் பணியில் உள்ளனர், அவர்களில் 3,400 பேர் பிரத்தியேகமாக பொதி சுமப்போராக பணிபுரிகின்றனர்.

மேலும், ஒழுங்கமைப்பு மையங்களில் சுமார் 4,500 பேர் பணியாற்றுவதாகவும் சுவிஸ் போஸ்ட் தெரிவித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles