4.8 C
New York
Monday, December 29, 2025

ETH இல் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு.

சுவிட்சர்லாந்தின் பெடரல்  தொழில்நுட்ப நிறுவகங்களான  ETH இல் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 3 மடங்கினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு  தொடக்கம், அவர்கள் தங்கள் படிப்புகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த பல்கலைக்கழகம்  கல்விக் கட்டணத்தை 730 பிராங்கில் இருந்து 2,190  ஆக மூன்று மடங்காக உயர்த்துகிறது.

ஏற்கனவே பதிவுசெய்த மாணவர்கள் தங்கள் பட்ட அல்லது பட்ட மேற்படிப்பை,  பழைய கட்டணங்களின் படியே  முடிக்க முடியும் என்று ETH அறிவித்துள்ளது.

ETH சூரிச் வளாகத்தில்,  தற்போது கல்வி கற்கும் மாணவர்களில் 40 வீதமானோர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாவர்.

Lausanne இல் உள்ள EPFL இல், இந்த எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles