5.3 C
New York
Tuesday, December 30, 2025

விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த அகதிகளுக்கு தடை.

Basel கன்டோனில் உள்ள Neubad மாவட்டத்தில், ஆதரவற்ற சிறு புகலிடக் கோரிக்கையாளர்கள் தனியார் விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்துவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர்கள் விளையாட்டு மைதானத்திற்குள் நுழைய சமூக நல அலுவலகம் தடை விதித்துள்ளது.

முன்னைய Balegra ஹொட்டேல், இப்போது, ஆதரவற்ற சிறு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

அவர்களால் அருகில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் குடியிருப்பாளர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சமூக நல அலுவலகம் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles