25.6 C
New York
Saturday, July 4, 2026

நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்.

பேர்னில், ஏ6 நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமானது.

நேற்று மாலை 6.45 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அவசரகால சேவையினர் விரைந்து சென்ற போது, கார் முற்றாக எரிந்து போயிருந்தது.

தீயணைப்பு பிரிவினர், நெருப்பை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

காரில் பயணம் செய்து கொண்டிருந்த நபர்,  உரிய நேரத்தில்,  வெளியேறியதால் காயங்களின்றி தப்பினார்.

கார் எரிந்து போனதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மூலம் – polizeinews.ch

Related Articles

Latest Articles