16.9 C
New York
Thursday, September 11, 2025

ஜனாதிபதி தெரிவை புறக்கணித்த மேற்குலக இராஜதந்திரிகள்

சுவிட்சர்லாந்தின்  புதிய ஜனாதிபதியாக, Karin Keller-Sutter தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வின் போது,மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் தமது ஆசனங்களில்  அமர மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா மற்றும் ஈரானைச் சேர்ந்த இராஜதந்திரிகள் அங்கு அமர்ந்திருந்ததால், மேற்கத்திய இராஜதந்திரிகள் பெடரல் பலஸில் உள்ள இராஜதந்திர கேலரியில் இருந்து  வெளியேறினர் விஐபி கலரியில் அமர்ந்தனர்.

போலந்து,  அவுஸ்ரேலியா, கனடா, ஜெர்மனி மற்றும் உக்ரேனிய தூதுவர்களே இவ்வாறு அமர மறுத்துள்ளனர்.

சிலர் மேற்கத்திய தூதுவர்களின் முடிவை ஆதரிக்கும் அதே வேளையில், மற்றவர்கள் அதை தேவையற்ற பிரதிபலிப்பு என்று குறிப்பிடுகின்றனர்.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles