19.8 C
New York
Thursday, September 11, 2025

சுவிட்சர்லாந்தின் புதிய ஜனாதிபதியாக கரின் கெல்லர்-சுட்டர் தெரிவு.

சுவிட்சர்லாந்தின் அடுத்த ஜனாதிபதியாக, FDP கட்சியின் பெடரல்  உறுப்பினர் கரின் கெல்லர்-சுட்டர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டில் அவர் தற்போதைய ஜனாதிபதி வயோலா அம்ஹெர்டுக்கு பதிலாக, பெடரல் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்வார்.

இவர் தற்போது துணை ஜனாதிபதியாக பணியாற்றி வருகிறார்.

232  உறுப்பினர்களைக் கொண்ட பெடரல் நாடாளுமன்றத்தில், நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்,   168 வாக்குகள் பெற்று கரின் கெல்லர்-சுட்டர்  ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

196 வாக்குகளுடன் கை பார்மெலின் (SVP) புதிய துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles