Meta வலையமைப்பின் கீழ் உள்ள அனைத்து சமூக ஊடகங்களும் சர்வதேச அளவில் நேற்று முடங்கின.
சுவிஸ் நேரப்படி நேற்று மாலை 6.45 மணியளவில் இந்த முடக்கநிலை ஆரம்பமானது.
இதனால் Meta வலையமைப்பின் கீழ் உள்ள WhatsApp, Facebook மற்றும் Instagram போன்ற சமூக ஊடகங்கள் முழுமையாக செயலிழந்தன.
எனினும் இரவு 10.30 மணிக்குப் பின்னர் அனைத்து சேவைகளும் வழமைக்குத் திரும்பின.
இதனால் உலகளாவிய ரீதியாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டனர்.
இந்த திடீர் முடக்க நிலைக்கான காரணத்தை Meta நிறுவனம் வெளியிடவில்லை.
மூலம் -20min.