26.5 C
New York
Thursday, September 11, 2025

தாக்கி விட்டு அலைபேசியை கொள்ளையிட்டவர் கைது.

Basel  SBB ரயில் நிலையத்தின் முன்பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

20 வயதுடைய சுவிஸ்  இளைஞன் ஒருவர் ரயில் நிலையத்தின் முன்பாக உள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்த போது முன்பின்தெரியாத நபர்கள் சிலர் அவரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

அதன் போது ஒருவர் அவரது அலைபேசியை பறித்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், சிறிது நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர்.

31 வயதுடைய அந்த நபர், மொராக்கோவைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்-20min.

Related Articles

Latest Articles