18.2 C
New York
Thursday, September 11, 2025

சுற்றுவட்டத்தில் மோதிக் கவிழ்ந்த கார்.

Graubünden  கன்டோனில், A13 நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறிய  கார் ஒன்று சுற்றுவட்டத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கார் தலை குப்புறக் கவிழ்ந்த நிலையில் காணப்பட்டது.

வியாழன் மாலை 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில், 77 மற்றும் 87 வயதுடைய தம்பதியினர் காயமடைந்த  நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles