Ticino நகரில், Sigirino அருகே, ஆட்களின்றி சென்ற Tilo ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
நேற்று பகல் 12 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பயன்பாட்டில் இல்லாத ஒரு பாதையில் இந்த விபத்து ஏற்பட்டது.
ரயிலின் ஒரு பகுதி தண்டவாளத்தை விட்டு வெளியேறி, Vedeggio ஆற்றங்கரையில் இருந்து சில மீட்டர் தூரத்தில் நின்றது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Rivera-Bironico மற்றும் Mezzovico இடையே பாதிக்கப்பட்ட பாதை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும்.
S90 S-Bahn லைன் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாற்றுப் பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. பயணிகள் தாமதம் மற்றும் ரயில் ரத்துகளை எதிர்பார்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min