25.8 C
New York
Friday, August 21, 2026

சுவீடன் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி.

சுவீடனின் ஒரேபுரோ (Örebro) நகரில் உள்ள ஒரு பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 12.33 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் அடங்குவதாக பொலிஸ் அதிகாரிகள் கூறினர்.

றிஸ்பேர்ஸ்கா கம்பஸ் எனப்படும், வயது வந்தோருக்கான கல்வி பாடசாலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில பலர் காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளை காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவலையோ, அவர்களின் நிலை குறித்தோ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்களும் வெளியாகவில்லை.

எனினும், வயது வந்தோருக்கான அந்த பாடசாலையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களே கல்வி கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles