Appenzeller Bahnen ரயிலில் முதியவர் ஒருவரைத் தாக்கிய நபர், 31 வயதுடைய ஆப்கானிஸ்தான் நாட்டவர் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 71 வயதுடைய முதியவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென அந்த நபர் முதியவரைத் தாக்கத் தொடங்கினார்.
பயணிகள் பலர் பார்த்துக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து விசாரித்து வரும் பொலிசார், குறித்த நபர் முன்னரும் பலமுறை வன்முறைப் போக்கில் செயற்பட்டவர் என்று தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min.