இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கி வந்த 3 சதவீத கழிவுத் தொகையை நீக்குவதற்கு நீக்க முடிவு செய்த நிலையில் விநியோகஸ்தர்கள் கொள்வனவை நிறுத்தியுள்ளனர்.
இதனால் நேற்றிரவே பெற்றோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த எரிபொருளை நிரப்பின.
இன்று காலையில் சில இடங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
எனினும் சில மணிநேரத்திலேயே கையிருப்பு தீர்ந்து போனதால், பெற்றோல் நிலையங்களில் எரிபொருள் இல்லை என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆனால் அரசாங்கம் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று கூறியுள்ளது.